சைட்டம் பிரச்சினை தொடர்பிலான ஆலோசனைகளுக்கு புதிய குழு
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் முன்னாள் போராளிகளா, இராணுவத்தினால் ஏவப்பட்டுள்ள கைக்கூலிகளா..?
அண்மைக்காலமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அதிகம் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை – தொண்டமானாறு – கட்டகுளம் கடற்கரையில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 118 கிலோ கிராம் கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 25, 27 மற்றும் 36 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
தமது சேவைத்தரம் குறைக்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 3 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தமது பதவியின் தரம் குறைப்பு செயல்பாட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக சேவை நேரம், விடுமுறை தினங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த தொழில் சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச்
கடந்த 3 ஆம்திகதி முதல் அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இது, கனடாவில் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையத்தின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின்படி ஆகும். அந்த மத்திய நிலையத்தின் மூலம் உலகில் தகவல் அறியும் சட்டம் தரவரிசைப்படுத்தப்படுகின்றது. மெக்ஸிகோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு தகவல் அறியும் சட்டமூலத்திற்காக முறையே முதலாம் மற்றும் இரண்டம் இடம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின்சார உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் நேற்று ஊடகங்களை சந்தித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது செயலிழந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றது. இதனால் நிதி, வாகனங்கள் என்பன வேறு வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, வாழ்க்கைச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையே தற்போதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.