வல்வெட்டித்துறையில் பாரியளவு கேரள கஞ்சா மீட்பு

328 0

இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை – தொண்டமானாறு – கட்டகுளம் கடற்கரையில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 118 கிலோ கிராம் கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 25, 27 மற்றும் 36 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.