அரசுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்! டிலான்

379 0

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கமொன்றை நிறுவியதாகவும், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் நிறைவடைய உள்ளது.

2015ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை கட்சியின் மத்திய செயற்குழு நிர்ணயிக்கும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.