கடந்த 3 ஆம்திகதி முதல் அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலத்திற்கு உலகில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இது, கனடாவில் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையத்தின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின்படி ஆகும்.
அந்த மத்திய நிலையத்தின் மூலம் உலகில் தகவல் அறியும் சட்டம் தரவரிசைப்படுத்தப்படுகின்றது.
மெக்ஸிகோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு தகவல் அறியும் சட்டமூலத்திற்காக முறையே முதலாம் மற்றும் இரண்டம் இடம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

