தமது சேவைத்தரம் குறைக்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 3 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தமது பதவியின் தரம் குறைப்பு செயல்பாட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக சேவை நேரம், விடுமுறை தினங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த தொழில் சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

