உண்டியல் குலுக்கிய விமல் வீரவன்ச கோடீஸ்வரர் ஆனது எப்படி..?
உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்ததாக கூறும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி என அமைச்சர் தலதா அத்துகோரல கேள்வியெழுப்பியுள்ளார்.
உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்ததாக கூறும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி என அமைச்சர் தலதா அத்துகோரல கேள்வியெழுப்பியுள்ளார்.
பிபில பிரதேசத்தில் பரவி வரும் இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த நோய் பரவுவதனை தடுப்பதற்கான மருந்து வகைகள் மற்றும் ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார். எச்.வன்.என்.வன் நோயினால் 30 பேருக்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பரிக்காவில் அமைந்துள் அங்கோல நாட்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி இடைநடுவே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு அங்கோலாவில் உய்கே நகரில் 8 ஆயிரம் பேருக்கு போதுமான விளையாட்டு மைதானத்தில் அதிகளவு மக்கள் வந்துள்ள நிலையில் மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் ரசிகர்கள் நிறைந்த பின்னர் அங்கு செல்ல முடியாத சிலர் மைதனாத்தின் வாயிற்கதவை உடைத்து உட்செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் அளவில்
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். அத்துடன், 80 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ நாட்டில் மின்டானயோ தீவில் உள்ள சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில் நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் தமிழக காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை உறுப்பினர்களான பி.ஆர். சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும், பணிப் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் மோசடியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார். 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பில் உறுதிப்பத்திரம் வழங்க 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உள்ளனர். இவ்வாறான 25 முதல் 30 பேர்
தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக வரும்நாட்களில் எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கம் பிரச்சினைகளை நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளார்.