பிபில பிரதேசத்தில் பரவி வரும் இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த நோய் பரவுவதனை தடுப்பதற்கான மருந்து வகைகள் மற்றும் ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எச்.வன்.என்.வன் நோயினால் 30 பேருக்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

