வெளிநாட்டு பணி தொடர்பில் அதிரடி!! சட்ட நடவடிக்கை

345 0

வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும், பணிப் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் மோசடியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.

5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பில் உறுதிப்பத்திரம் வழங்க 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உள்ளனர்.

இவ்வாறான 25 முதல் 30 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான அதிகாரிகளுக்கு தமது அமைச்சில் இடமில்லை என அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.