மாலபே விவகாரம் – உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெறும் – ராஜித

Posted by - February 13, 2017

மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பிரிவு உயர்பீடங்களுடன் கலந்துரையாடர்களை நடத்தவுள்ளதாக அரைமச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் மருத்துவ பேராசிரியார்களால் யோசனைகள் சிலவும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சயிடம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தமக்கு தனியான கொடுக்கல்வாங்கல்கள் இல்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மாலபே மருத்துவ கல்லூரி பிரச்சினை – அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டும் – சுசில்

Posted by - February 13, 2017

அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாலபே தனியார் கல்லூரி தொடர்பான பிரச்சினை அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும். எனவே அதனை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது உசிதமாக அமையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசியலில் தற்போதைய சூழ்நிலையானது சவால்மிக்கதாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பு மாற்றம் செய்யப்பட கூடாது – மஹிந்த

Posted by - February 13, 2017

மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேறகொள்வதற்கு அல்லாமல் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அல்லவென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறிக்கொண்டு நாட்டை கூறுப்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. வடக்கு கிழக்கை ஒன்றைத்து சமஸ்டி ஆட்சி முறையொன்றை உருவாக்கும் அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர். எனவே அரசியல் அமைப்பில் திருத்தங்களை

பிரதமரின் பொருளாதார முகாமைத்துவ குழு நாட்டின் உடமைகளை கொள்ளையிடுகின்றது – பந்துல குணவர்தன

Posted by - February 13, 2017

கடந்த இரண்டு வருடங்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த நிலையில் இதன்மூலம் மீதப்படுத்தப்பட்ட நிதி எங்கே? என ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமரால் பொருளாதார முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் நாட்டின் உடமைகள் கொள்ளையடிக்கப்படுகின்றது. பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படுவதாக தெரிவித்தாலும் அவ்வாறான செயற்பாடொன்று இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம்

பிரான்ஸ் நாட்டவர்களுக்கு இலங்கையில் சிறை

Posted by - February 13, 2017

தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளதுடன், தொடருந்தின் பயணிகள் பெட்டியில் சித்திரங்களை வரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுமார் 64 ஆயிரம் ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதவானிடம் அறிவித்துள்ளனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை காலி முதன்மை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரை சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில்

Posted by - February 13, 2017

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர் டொபாய்ல் அகமட் தெரிவித்தார். குறித்த உடன்படிக்கை தற்போது செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுவருவதாக பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருடனான நேற்றைய சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார். பங்களாதேஷிய உற்பத்திகளை மூன்று தினங்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து வைப்பது தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் மருந்துப்பொருட்கள் மற்றும் சீPமெந்து ஆகிய பொருட்களை குறைந்த வரியில் பங்களாதேஷில் இருந்து ஏற்றுமதிசெய்ய

உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் – எம்.எல்.ஏ.க்களிடையே சசிகலா சூளுரை

Posted by - February 12, 2017

சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை பின்னுகிறார்கள். தலைவரும், அம்மாவும் நமக்கு துணையாக இருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க. அரசாங்கத்தை யாரும் எந்த நேரத்திலும் தடை போட்டு நிறுத்தி வைக்க முடியாது. நம்முடைய எம்.எல்.ஏ.க்கள் ஒரு கடல். இதை யாராலும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. இந்த கட்சியையும், ஆட்சியையும் எந்த வித முயற்சி செய்தாலும் அதில் பலன் ஒன்றும் இல்லை. அவர்கள் நிச்சயம்

எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர் – கூவத்தூரில் சசிகலா பேட்டி

Posted by - February 12, 2017

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி, அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். யாரையும் அடைத்து வைக்கவில்லை. அரசுக்கு எந்தவித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் வேண்டுமென்றே ஊடகங்களில் சில தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அது இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். அனைவரும் இங்கே

ஆளுநருடன் மைத்ரேயன் எம்.பி. சந்திப்பு நிறைவு

Posted by - February 12, 2017

தமிழக அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஒருபுறமிருக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றும் பலர் ஆதரவு அளித்துள்ளனர். மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர். இந்நிலையில், முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்து வரும் மைத்ரேயன் எம்.பி.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு 7க்கு மேல் தாண்டாது – ஓ.எஸ்.மணியன்

Posted by - February 12, 2017

தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சசிகலா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்றும் கூவத்தூர் சென்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூவத்தூரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் கொடுத்து இவ்வளவு நாள் ஆகிறதே? எப்போது ஆட்சியமைப்பீர்கள்? பதில்: கவர்னர் அழைத்தால் அடுத்த நிமிடமே