பிரதமரின் பொருளாதார முகாமைத்துவ குழு நாட்டின் உடமைகளை கொள்ளையிடுகின்றது – பந்துல குணவர்தன

216 0

கடந்த இரண்டு வருடங்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த நிலையில் இதன்மூலம் மீதப்படுத்தப்பட்ட நிதி எங்கே? என ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமரால் பொருளாதார முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் மூலம் நாட்டின் உடமைகள் கொள்ளையடிக்கப்படுகின்றது.

பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படுவதாக தெரிவித்தாலும் அவ்வாறான செயற்பாடொன்று இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்படுவதாக பந்துல குணவர்தன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால் 60 ஆயிரம் கோடி ரூபாய்களை அரசாங்கம் மீதப்படுத்தியிருக்க வேண்டும் என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.