தமிழக அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றும் பலர் ஆதரவு அளித்துள்ளனர். மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்து வரும் மைத்ரேயன் எம்.பி. இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி மைத்ரேயன் எம்.பி. விரைவில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வேறு வடிவில் போராட்டத்தை தொடங்க உள்ளதாக சசிகலா தரப்பு கூறியதையடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

