அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மாலபே தனியார் கல்லூரி தொடர்பான பிரச்சினை அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.
எனவே அதனை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது உசிதமாக அமையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியலில் தற்போதைய சூழ்நிலையானது சவால்மிக்கதாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.

