மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு

Posted by - February 14, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 442 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பில் இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நேற்று முன்தினம்  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 752 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன. டெங்கு நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்ட 20 வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதுடன், 27 இடங்களில் எச்சரிக்கை அறிவித்தல்களும் ஒட்டப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

காணிகளை விடிவுக்கக் கோரி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 14, 2017

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் . சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை  இன்று ஆரம்பித்துள்ளனர்.

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

Posted by - February 14, 2017

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப்பகுதியி் கடந்த வாரம் இனம் கானப்பட்ட எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை சுகாதார ஆராச்சிக் கழகத்தின் அறிக்கை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வைரஸ் தாக்கமாக இருக்கலாம் என கருதப்பட்ட மேலும் 3பேரின் இரத்த மாதிரிகள் கிளிநொச்சி  பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக மருத்துவ

வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ள முக்கிய தூதுவர்கள்

Posted by - February 14, 2017

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் நாளை முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த காலப்பகுதியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் என்பன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளனர். அத்துடன் 15ம் திகதி அவர்கள் வடக்கு முதல்வரை

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா

Posted by - February 14, 2017

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் சென்றிருக்கிறார்கள். ஜெயலலிதா எப்போதுமே, இவர்களுக்கு பதவி அளிக்கவில்லை. முக்கியமாக அவர்களை ஜெயலலிதா எப்போதும் விரும்பியதும் இல்லை.தொடர்ந்து 30 ஆண்டுகள், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து கொண்டிருந்தவர்கள் சிறைக்குச் செல்ல உள்ளனர். சசிகலா குடும்பத்துக்கு யார் தேவையோ, அவர்களுக்கு பதவி அளிக்கின்றனர்.எனக்கு அழைப்பு விடுத்த முதல்வர்

இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை-அமெரிக்கா

Posted by - February 14, 2017

இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை பிரஜைகள் தொடர்பான அமெரிக்க வீசா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சில சமுகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இலங்கையர்கள் வீசா இன்றி அமெரிக்காவுக்கு பிரவேசிப்பதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்ததாக குறித்த செய்தியில் கூறப்பட்டது. எனினும் இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. 1

போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் – முஜீபுர் றஹ்மான்

Posted by - February 14, 2017

கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும் என்றும் ஆனால் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் பொலிஸார் மீது குற்றம சாட்டியுள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கொழும்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் முஜீபுர் றஹ்மான் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் அதிகமாக

சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

Posted by - February 14, 2017

இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார். அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி அண்மையில் உருவாக்கப்பட்டது.  இது அரசாங்கத்துடனும், சிங்கள பெரும்பான்மை மக்களுடனும் இணக்க அரசியலில் ஈடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.  தற்காலத்தில் சில அரசியல் கட்சிகள் அரசாங்கம் மற்றும் பெரும்பான்மை மக்களுடன் முரண்பாட்டு அரசியலை பின்பற்றுகின்றனர். தமிழ் மக்கள் சார்பில் அதிக பட்ச நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டுள்ள தமிழ் தேசிய

கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது – ஆனந்தசங்கரி

Posted by - February 14, 2017

தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே ஆனந்தசங்கரி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகளுடன் தலைமையால் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராஜினாமா செய்ய வைப்பதே அந்தக் கட்சிக்கு உள்ள ஒரேயொரு வழியாகும் என ஆனந்த

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Posted by - February 14, 2017

கஞ்சாவை தன்னுடன் வைத்திருந்த பெண்ணொருவரை கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண் 960 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்த கஞ்சாவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் மருதமுனை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக குறித்த பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.