தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே ஆனந்தசங்கரி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகளுடன் தலைமையால் கலந்தாலோசிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராஜினாமா செய்ய வைப்பதே அந்தக் கட்சிக்கு உள்ள ஒரேயொரு வழியாகும் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
பொறுப்பேற்றவர்களின் தவறான கையாள்கையாலும், பிழையான அணுகுமுறையாலும் தமிழ் மக்களின் உரிமைகளும், சலுகைகளும் வேகமாக அழிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

