இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை-அமெரிக்கா

282 0
இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
இலங்கை பிரஜைகள் தொடர்பான அமெரிக்க வீசா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சில சமுகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இலங்கையர்கள் வீசா இன்றி அமெரிக்காவுக்கு பிரவேசிப்பதற்கான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்ததாக குறித்த செய்தியில் கூறப்பட்டது.
எனினும் இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.