சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

348 0
இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார்.
அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி அண்மையில் உருவாக்கப்பட்டது.
 இது அரசாங்கத்துடனும், சிங்கள பெரும்பான்மை மக்களுடனும் இணக்க அரசியலில் ஈடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.
 தற்காலத்தில் சில அரசியல் கட்சிகள் அரசாங்கம் மற்றும் பெரும்பான்மை மக்களுடன் முரண்பாட்டு அரசியலை பின்பற்றுகின்றனர்.
தமிழ் மக்கள் சார்பில் அதிக பட்ச நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும், இணக்க அரசியல் மற்றும் முரண்பாட்டு அரசியல் கொள்கைகளால் பிளவுப் பட்டுள்ளது.
 அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலானது, அரசாங்கத்துக்கு ஆதரவான எதிர்கட்சி என்று தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
அவ்வாறின்றி, தமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, முழுமையான இணக்க அரசியலில் ஈடுபடும் என்று கருணா கூறியுள்ளார்.