பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்

Posted by - February 15, 2017

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று பெங்களூரு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி கோர்ட்டு கூறிய தீர்ப்பை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. அதோடு சசிகலா உள்பட 3 பேரும் விசாரணை கோர்ட்டில்(பெங்களூரு தனி கோர்ட்டில்) உடனே சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை

அரிசியை சதொச ஊடாக கொள்வனவு செய்ய அனுமதி

Posted by - February 15, 2017

தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வன ஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - February 15, 2017

சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த லிதுவேனியா நாட்டவரொருவரை காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது. இந்த போதைப்பொருளை பொறுப்பேற்க வந்த நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் ,லிதுவேனியா , இந்தியா , நைஜீரியா மற்றும் இலங்கையை தொடர்பு படுத்தி இந்த போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , நீதிமன்ற

மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடும் காவற்துறை

Posted by - February 15, 2017

மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடனான இரண்டு கொள்ளையர்கள் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிடும் சிசிடிவி காட்சி அடங்கிய காணொளியொன்றை காவற்துறை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். மேல் மாகாணத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களில் கொள்ளையிட்டுள்ள இந்த கொள்ளையர்கள் இருவரும் மதிய நேரத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு நிதி நிறுவனத்தினுள் நுழைந்து இந்த கொள்ளையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. உந்துருளியில் ஆயுதங்களுடன் வரும் இவர்கள் ஆயுதங்களை

மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை குற்றச்சாட்டின் குற்றவாளிகள் நாம் இல்லை

Posted by - February 15, 2017

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்க பல கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வழக்கின் பிரதிவாதிகளிடம் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சாட்சியமளித்தார். இந்த வழக்கில் தாம் குற்றவாளி அல்லவென அவர் குறிப்பிட்டார். சாட்சி விசாரணை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின்

தென் சீனக் கடலில் மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம்

Posted by - February 15, 2017

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் மின்சாரத் தேவைக்காக சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிரம்ப்பின் வருகைக்கு 20 லட்சம் பேர் எதிர்ப்பு – கையெழுத்து இயக்கத்தை பிரிட்டன் பிரதமர் நிராகரித்தார்

Posted by - February 15, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டன் நாட்டுக்கு வருவதை எதிர்த்து சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்ற கையெழுத்தின் கருத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே நிராகரித்துள்ளார்.

மராட்டியத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார் தெண்டுல்கர்

Posted by - February 15, 2017

தெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பாகிஸ்தானில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலி

Posted by - February 15, 2017

பாகிஸ்தானில் வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது அது வெடித்தது. அந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

லிபியாவில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை

Posted by - February 15, 2017

பல்வேறு காரணங்களுக்காக லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.