மராட்டியத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார் தெண்டுல்கர்

354 0

தெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக உள்ளார். எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வசதியில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை அரசின் உதவியுடன் செய்து கொடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜூ கான்ட்ரிகா கிராமத்தை தத்தெடுத்து தெண்டுல்கர் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தார். இந்த நிலையில் தெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம், குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக தெண்டுல்கர் எம்.பி.உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.