பல்வேறு காரணங்களுக்காக லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
லிபியாவில் 34 ஆண்டுகால கடாபியின் சர்வாதிகார ஆட்சியை, 2011–ம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுவின் உதவியுடன் ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது. அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. ஆனாலும் போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
அங்கு லிபியா சிறப்பு படைக்கும், இஸ்லாமிய போராட்டக்குழுவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. தொடர் தாக்குதல் காரணமாக லிபியாவில் மோசமான நிலைமை நிலவுகிறது. இருதரப்பினரும் ராக்கெட் மற்றும் பீரங்கி மூலம் தாக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், குழப்பம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 13 எகிப்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லிபியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட எகிப்தியர்கள் தான் விடுதலை செய்யப்ப்பட்டுள்ளனர்.லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் எகிப்திய ராணுவத்தினர் பல்வேறு ராக்கெட் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

