கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்க பல கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வழக்கின் பிரதிவாதிகளிடம் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சாட்சியமளித்தார்.
இந்த வழக்கில் தாம் குற்றவாளி அல்லவென அவர் குறிப்பிட்டார்.
சாட்சி விசாரணை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் சாட்சி கூண்டில் இருந்து சாட்சியமளித்த நிலையில் தானும், குற்றவாளி அல்லவென குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் இன்று தினம் தொடரவுள்ளது.

