மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Posted by - November 22, 2017

மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு  7 ஆண்டுகள் கடூழியச் சிறை -யாழ்.மேல் நீதிமன்று தீர்ப்பு மருகனை கத்தியால் குத்திக்கொலை செய்த மாமனாருக்கு கைமோசக் கொலைக் குற்றத்தில் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இந்த வழக்கின் இரண்டாவது எதிரியான இறந்தவரின் மனைவியின் சகோதரனும் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டது. மற்றொரு எதிரி

யாழில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் சேதம்

Posted by - November 22, 2017

அண்மையில் பெய்த மழைக் காரணமாக யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர் பீ.தயாபரசிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வயல் நிலங்களில் நூற்றுக்கு 85 சதவீதமானவை எவ்வித பயனையும் பெறமுடியாத நிலையில் அழிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனுடன் யாழ்ப்பாணத்தில் நிலக்கடலை, வெங்காயம், மிளகாய் மற்றும் மரக்கறி பயிரிடப்பட்டிருந்த 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அதிக மழையால் அழிவடைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர்

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்து – சிறிதரன்

Posted by - November 22, 2017

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்துக்கள் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் ஆகிய பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்கள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தாவரவியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாம் குறித்த இரு பூங்காக்களையும் புனர்நிர்மாணம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 1 மில்லின் ரூபாவும், பிரதமரின் அமைச்சின் கீழ் கிராம அபிவிருத்தி

நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - November 22, 2017

பதன பண்டாரவெல, மகுல்அல்ல ஆற்றில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் பண்டாரவெல க்ரேக்வத்த பகுதியை சேர்ந்த 69 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் வேலைத்திட்டம்

Posted by - November 22, 2017

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை பலப்படுத்தல் தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தரத்தின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்காக 1,200 ரூபா முதல் 1,500 ரூபா வரையான பெறுமதியான காலணிகளை பெற்றுக் கொள்ளும் அட்டைகளை இவ்வருடத்தில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 808.27 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையினை ஏற்றுக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி

Posted by - November 22, 2017

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையான ஆதரவை வழங்குமென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் Wencai Zhang தெரிவித்தார். 2018 – 2022 காலப்பகுதியின் அபிவிருத்தி உதவிக்கான நாட்டின் பங்கேற்பு மூலோபாயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இக்காலப்பகுதிக்கான உதிவியாக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 4 முதல் 5 பில்லியன்

மன்னாரிலும் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Posted by - November 22, 2017

வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று  காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களும்  பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வடக்கு உற்பட நாடு முழுவதும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணி நேரம் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள்

13 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 22, 2017

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த  ஒக்டோபர் மாதம் குறித்த 13 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த 13 மீனவர்களும் இன்று நான்காவது முறையாக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான்  அலெக்ஸ் ராஜா கிரேசியன் 13 மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கொள்கைக்காக சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணையத்தயார்- சுசில்

Posted by - November 22, 2017

தேவை கருதி ஒரு கொள்கைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை வரும் நிலையில் இணையத்தயார். நாம் யாரையும்  நிராகரிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்ட நபர்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதில் தவறேதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில்

இன்னும் சற்று நேரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கையில்!

Posted by - November 22, 2017

நாஸாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று மாலை – இன்னும் சற்று நேரத்தில் – இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் கதிர்கள் நம் பார்வையை மறைப்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் காண முடியாது. இந்நிலையில், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மிகச் சரியாக இலங்கைக்கு நேர் மேலே இன்று (22) மாலை 6.25 மணிக்கு வரவிருக்கிறது. இதுவரை மனிதனால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாபெரும் விண்வெளி நிலையம் இது. 109 மீற்றர்