பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் வேலைத்திட்டம்

317 0

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை பலப்படுத்தல் தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி தரத்தின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்காக 1,200 ரூபா முதல் 1,500 ரூபா வரையான பெறுமதியான காலணிகளை பெற்றுக் கொள்ளும் அட்டைகளை இவ்வருடத்தில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக 808.27 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையினை ஏற்றுக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment