சிறு­மியை கடத்தி துஷ்­பி­ர­யோகம் இரு­வ­ருக்கு 18,27 வருட கடூ­ழியம்

Posted by - December 2, 2017

14 வயது சிறு­மியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய இரு­வ­ருக்கு தலா 18, 27 வரு­டங்கள் கடூ­ழிய சிறைத் ­தண்­டனை விதித்து கல்­முனை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நவ­ரட்ண மார­சிங்க தீர்ப்­ப­ளித்தார். கடந்த புதன்­கி­ழமை மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே மேற்­படி தீர்ப்பை வழங்­கினார். திருக்­கோவில் பிர­தே­சத்தை சேர்ந்த சிறு­மியை கடந்த 2015 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மோட்டார் சைக்­கிளில் கடத்திச் சென்று அட்­டா­ளைச்­சேனை சம்­பு­நகர் பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து இருவர்

20 இந்திய மீனவர்கள் கைது

Posted by - December 2, 2017

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும் இலங்கையின் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். மீனர்களிடம் இருந்து 2 படகுகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கவுள்ளனர்.

மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு

Posted by - December 2, 2017

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார்  37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை

தேர்தல்களில் மலையகப்பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் – எம். சச்சிதானந்தன்

Posted by - December 2, 2017

தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடு விடயத்தில் மலையகப் பெருந்தோட்டத்துறைசார் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார். ஊவா மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில், தேர்தல்கள் எதுவென்றாலும் அத்தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடுகள் வழங்கப்படல் வேண்டும். அவ் ஒதுக்கீடுகள் பெரும்பான்மையின பெண்களுக்கு

தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்-மகிந்த வில்வோராச்சி

Posted by - December 2, 2017

வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென  வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில்  வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; ரணில் ஆலோசனை

Posted by - December 2, 2017

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும்  தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

OCKHI சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்

Posted by - December 2, 2017

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று

மாகாணசபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் பணிகள் துரிதம்

Posted by - December 2, 2017

மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை தீர்மானிக்கும் நடவடிக்கையை துரிதமாக்கும் பொருட்டு இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

Posted by - December 2, 2017

கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இதுவரை சுமார் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் ஹசன் அலி – ரிசாத் கட்சிகள் கூட்டணி!

Posted by - December 2, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.