தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்-மகிந்த வில்வோராச்சி

4483 0

வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென  வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார்.

வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில்  வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

வவுனியாவில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில அசம்பாவித சம்பவங்களை பற்றியும் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடைகள் தீப்பற்றி எரித்த சம்பவங்களை வைத்து ஒரு சிலர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளனர்.

அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை நேற்றைய தினம் வேப்பங்குளம் பகுதியில் வியாபார நிலையம் தீப்பற்றியமை தொடர்பில் ஒருசிலர் வீண் வதந்திகளை பரப்பிவருகின்றனர்.

எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலங்களாக இருப்பதால் இளைஞர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துவோர் மீதும் கூட்டமாக குழுக்களாக நின்று பொதுமக்களுக்கு இடையூறு செலுத்துபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  உங்களின் பிள்ளைகளை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும்.

இதேவேளை வைரவர்புளியங்குளம், குருமண்காடு பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்கள் என ஒருவர் கூறியதற்கு அதற்கு பதிலளித்த பொறுப்பதிகாரி, மாலை வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் தம்மை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியிருந்தார்.

Leave a comment