கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 5, 2017

வவுனியா புட்சிட்டிக்கு முன்பாக நேற்று இரவு 11 மணியளவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கராசா தினேஷ்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

Posted by - December 5, 2017

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றைகோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும்-காலநிலை அவதான நிலையம்

Posted by - December 5, 2017

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00

மேல்மாகாண வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று ஆரம்பம்

Posted by - December 5, 2017

மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த விவாதம் எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் கடந்த 21ம் திகதி மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பெண் யாழ்ப்பாணத்தில் கைது

Posted by - December 5, 2017

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம், கைய்ட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து, இங்கு தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட பெண் இந்தியாவின் ராஜபுரம் பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவர் என அடையாளம்காணப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று கைய்ட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு 10 ரூபாய் இலட்சம் இழப்பீடு

Posted by - December 5, 2017

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு அரசின் மூலம் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் உயிரிழந்த 8 மீனவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, காலி உள்ளிட்ட அனர்த்தத்திற்கு உள்ளாகி இருக்கும் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் உள்ளிட்ட

கட­லுக்கு சென்ற மீன­வர்கள் நால்­வரை காண­வில்லை!

Posted by - December 5, 2017

நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் கட­லுக்குச் சென்ற மீன­வர்கள் அடங்­கிய குழு­வொன்று கடந்த 29 ஆம் திகதி ஆழ் கடலில் விபத்­துக்­குள்ளாகி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க: கடந்த ஓராண்டு ஒரு பார்வை!

Posted by - December 5, 2017

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஓராண்டுகளாக அ.தி.மு.க.வில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளை காணலாம்.

நாளை முதல் சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

Posted by - December 5, 2017

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - December 5, 2017

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.