தல பூட்டுவா யானை கொலை:வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்
கல்கமுவை தல பூட்டுவா யானை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பொறுப்பான பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கல்கமுவவில் தலப்பூட்டுவா யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கும் தொடர்பு உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக வீடமைப்பு பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தலப்பூட்டுவா யானை கொலை தொடர்பில் பிரதியமைச்சர் மீது சுமத்தப்படும்

