நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளது – ரணில்

278 0

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டதின் கீழ் 850 விகாரைகளுக்கான நிதியுதவி அளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற வகையில் இந்த நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளன.

யுத்தத்தின் பின்னர் பொதுமக்களை ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டுச் செல்வது என்று சிந்தித்தோம்.

அதனடிப்படையிலேயே பல கட்சிகளை ஒன்றிணைத்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தல் என்ற அடிப்படையில் கீழ் ஏனைய அனைத்து கோரிக்கைகளையும் பெற்றுத்தர முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment