தல பூட்டுவா யானை கொலை:வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

226 0
கல்கமுவை தல பூட்டுவா யானை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பொறுப்பான பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்கமுவவில் தலப்பூட்டுவா யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கும் தொடர்பு உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக வீடமைப்பு பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தலப்பூட்டுவா யானை கொலை தொடர்பில் பிரதியமைச்சர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அவரிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தலப்பூட்டுவா யானை கொலை தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிரதியமைச்சர் இந்திய பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமான ஒருவரும் காணப்படுகின்றமையினால், யானை கொலை தொடர்பில் பிரதியமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையிலேயே யானைக் கொலை தொடர்பில் தமக்கு தொடர்பு இல்லை என்றும் அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதவியை துறக்க தயார் எனவும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment