இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

250 0

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று  நடைபெற்றதாக முல்லைத்தீவு மாட்டவ அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார்

இது தொடர்பான ஊடகங்களுக்கான அறிவிப்பினை அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் இன்று அறிவித்துள்ளார்.

இலங்கையில்அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டதற்கு அமைய அரசினால் அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளாரினால் மாவட்டத்தில் உள்ள முப்படைகளின் பிரதானிகள்பிரதேச செயலாளர்கள்அரச உயர்அதிகாரிகள்நீர்பாசன திணைக்கள அதிகாரிகளின்  பங்கு பற்றலுடன் இன்றுகாலை 11.30 மணியளவில் அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வங்கக்கடலில் தற்போது 1100 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாளமுக்கத்தினால் ஏதாவது பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்படுமாயின் அவற்றுக்கான முன்னாயத்த மற்றும் அவசர நடவடிக்கைகள் நிவாரணை சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளியானது முல்லைத்தீவு மாவட்டத்தை ஊடறுத்து செல்லுமாயின் ஏற்படும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது விசேடமாக கடற்தொழிலாளர்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது இதில் முப்படையினர் மற்றும் பொலீஸாரின் மீட்ப்புப்படையணினை தயார் நிலையில் வைத்துக்கொள்ளல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக

முல்லைத்தீவு மாட்டவ அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார்.

Leave a comment