நாளை மறுநாள் 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நீர்வெட்டு

Posted by - December 5, 2017

நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை அம்பலாங்கொடை , கலேகொட , பலபிடிய ,கொஸ்கொட ,படபொல மற்றும் ஹெல்பிடிய போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. தல்கஸ்கொட பாலத்தின் ஊடாக அம்பலாங்கொடைக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு தேவை காரணமாக இவ்வாறு 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதி

Posted by - December 5, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட அனுமதிகோரி முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதேநேரம், இந்த கூட்டத்துக்கு முன்னதாக, சிறிலங்கா சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்கழு கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த

உள்ளூராட்சி பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை – மகிந்த

Posted by - December 5, 2017

உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அழுத்கம – களுமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கு வீடொன்றுக்கு சென்றிருந்த அவர், அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் விடயம் இல்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி” என்பது வதந்தி -அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Posted by - December 5, 2017

நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இவ்வாறான தவறான செய்திகள் வட்ஸ்அப் மூலம்

அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்

Posted by - December 5, 2017

தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கும். ஒருவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் வேறு கதையேயின்றி அதை

ஐ.நா. பிரதிநிதிகள் – சுகாதார அமைச்சர் சந்திப்பு

Posted by - December 5, 2017

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சிறைச்சாலை சுகாதார சேவைகள் மற்றும் மனநோய் தொடர்பிலான சுகாதார சேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், மனநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் முறை தொடர்பிலும், சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை வழங்குதல் மாற்றும் புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் விளக்கங்களை அளித்துள்ளனர். இதேவேளை,

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை

Posted by - December 5, 2017

sபொலன்னறுவையில் சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கென தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலையான இதற்கு சீன அரசாங்கம் இதற்காக 120 கோடி ரூபாவை வழங்கவுள்ளது. சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் உட்பட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும். 200 நோயாளர்களுக்கான கட்டில்களை கொண்டிருக்கும் இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் சேவை பிரிவும் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

நாளை நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தம்

Posted by - December 5, 2017

புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கம் நாளை (06) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். புகையிரத சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வைகையிலேயே இந்த வேலைநிறுத்தம் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

கணனி எழுத்தறிவு வீதத்தில் ஆண்கள் முன்னிலையில் – அறிக்கை

Posted by - December 5, 2017

2017 இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் 5 தொடக்கம் 69 வரையான வயதுப்பிரிவுகளுக்கிடையில் கணனி எழுத்தறிவானது 28.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது என்று தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்இ கலாநிதி அமர சதரசிங்க தெரிவித்தார். தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிராம மற்றும் தோட்டப் பிரிவுகளின் கணனி எழுத்தறிவு ஆனது முறையே 26.5 மற்றும் 9.5 சதவீதமாக இருக்கையில் வதிவிடப்

தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர்!

Posted by - December 5, 2017

“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.