வித்தியாதரனை நிறுத்துவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள் குழப்பம்!

Posted by - December 7, 2017

உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வேட்பாளர் தொடர்பாக இப்போதே குடுமிப்பிடி சண்டைகள்

கொள்கை சார்ந்த மாற்றுத்தரப்பை மேற்குலகு விரும்பவில்லை!

Posted by - December 7, 2017

தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு பலமான தரப்பு ஒன்று தோற்றம் பெற்றுவிடக்கூடாதென்பதில் இந்திய மற்றும் மேற்குலக தரப்புக்கள் முழு அளவில் ஆர்வம் காட்டிவருவது இம்முறை அப்பட்டமாக

நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை

Posted by - December 7, 2017

நியமிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. தேங்காய், கருவாடு, பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுவிலையின் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதற்கமைவாக தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா ,கருவாடு (கட்டா) ஒரு கிலோவிற்கான

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 7, 2017

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் இருநாட்டு நீண்டகால இராஜதந்திர தொடர்புகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடர்ந்தும் பேணுவது தொடர்பிலும் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை தோல்வி – புகையிரத வேலைநிறுத்தம் தொடரும்

Posted by - December 7, 2017

புகையிரத சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக புகையிரத சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. புகையிரத உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை, இது தொடர்பான பேச்சுக்குவார்த்தை ஒன்று இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் தமது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக புகையிரத சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லெப்கேணல் ஞானசுதன்/மணி – பகிரப்படாத பக்கம்

Posted by - December 7, 2017

பகிரப்படாத பக்கம் -5 இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா சாப்பிடுங்கோ என்றுஉணவை கொடுத்து கொண்டு அருகில் அமர்கிறார். தம்பி என்னப்பு நான் சமைச்சு தாறன்என்றாலும் கேட்கிறியள் இல்ல இப்பிடி எனக்கு நீங்கள் சாப்பாட்ட தாறியள்.? அந்தவயதானவளுக்கு நிலமை புரிந்திருக்கவே இல்லை. அங்கே என்ன நடக்கிறது

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு!

Posted by - December 7, 2017

நடைபெறவுள்ள உள்ளுராட்சி  மன்ற தேர்தலில்  கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது. இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில்  சுயேட்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறுப்பினா்.சுப்பையா

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு!

Posted by - December 7, 2017

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு! தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்திவருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரெலோவின் அரசியல் குழு, யாழ்ப்பாணம் நகர் கொட்டடியில் இன்று மாலை

யாழில் கோர விபத்து ; மனைவி பலி, கணவன் படுகாயம்

Posted by - December 7, 2017

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே  மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சாவகச்சேரி – மீசாலை ஏ-9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார். இச் சம்பவத்தில் சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன்  67 வயதுடைய சின்னையா சந்திரபாலன் என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவனும் மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன்

மாத்தளை பாடசாலை முன் திடீர் ஆர்ப்பாட்டம்

Posted by - December 7, 2017

பாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. விஜய வித்தியாலய என்ற பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டது. பாடசாலைக்கு அருகாமையில் பாதுகாப்புகள் நிறைந்த நீதிமன்றம் அமைக்கப்படுவதால், பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பாடசாலையின் முன்னாள் மாணவர்களும் பெற்றோரும் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.