நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை

256 0

நியமிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தேங்காய், கருவாடு, பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுவிலையின் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இதற்கமைவாக தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா ,கருவாடு (கட்டா) ஒரு கிலோவிற்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோவிற்கான சில்லறை விலை 130 ரூபா ஆகும்.

Leave a comment