மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழி வழக்கு சம்பந்தமாக நேற்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விசாரனையின்றி வழக்கு தொடர்ந்து பிறிதொரு தினத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி குடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக வீதியோரமாக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்ற வேளையில் மனித எச்சங்கள் தென்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து மன்னாரில் அன்றைய நீதிபதியாக இருந்த செல்வி கனகரட்ணம் ஆனந்தியின் முன்னிலையில், சட்ட