யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

268 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இன்று நடைபெற்ற முதலாம் நாள் அமர்வில் உயர் பட்டப் படிப்புகள் பீடம்,முகாமைத்துவ வணிக பீடம்,கலைப்பீடம், சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியாவளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவர்களில், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் கலாநிதி பட்டத்தையும், 64 பேர் பட்டப்பின் தகைமைகளையும், முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த 293 பேர் வியாபார நிருவாக மாணி பட்டத்தையும், 48 பேர் வணிகமாணி பட்டத்தையும், கலைப்பீட சட்டத்துறையைச் சேர்ந்த 63 பேர் சட்டமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 53 பேர் விவசாய விஞ்ஞான மாணி பட்டத்தையும், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகின் 58 பேர் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பம், மருந்தாளர், தாதியம் ஆகிய துறைகளில் விஞ்ஞானமானி பட்டங்களையும், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 84 பேர் பிரயோக விஞ்ஞான மாணி பட்டத்தையும், வணிக கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 110 பேர் வணிகமாணி பட்டத்தையும் 10 பேர் நேரடியாகப் பிரசன்னமாகாத நிலையிலும் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

2018, மார்ச் மாதம் நடைபெறவுள்ள 33 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியில் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், மற்றும் உயர்பட்டப் படிப்புகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வெளிவாரியாகப் பட்டம் பெறுபவர்களின் பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

Leave a comment