Breaking News
Home / தமிழீழம் (page 2)

தமிழீழம்

நெடுந்­தீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு விரைவில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை நெடுந்­தீ­வுக் கடற்­க­ரை­யைக் கட­ல­ரிப்­பில் இருந்து பாதுகாப்­ப­தற்கு கடற்­க­ரை­யோர பாது­காப்பு திணைக்களத்தின் உத­வி­யு­டன் தடுப்பு அணை கட்­டப்­ப­டும் என்று    மாவட்­ட­செ­ய­லக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். நெடுந்­தீவு பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பிலான கலந்­து­ரை­யா­டல் நெடுந்­தீவு பிர­தேச செய­ல­கத்­தில்  நடை­பெற்­றது. அதில் இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அக் கூட்­டத்­தில் கலந்து ­கொண்ட மக்­கள் பிர­தி­நி­தி­கள்   …

Read More »

முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

கடந்த 17ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த  கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோடியிருந்தது. விபத்தில் காயமடைந்த சிறுவன்   கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று நான்குமணிளவில்  உயிரிழந்துள்ளான் குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய …

Read More »

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் தாக்கப்பட்டதை கண்டித்து யாழில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி யை நிறுத்தகோரி நேற்றைய தினம் கொழும்பில் சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு  மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் போது சில மருத்துவகல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.எனவே அரசின் இந்த செயற்பாட்டை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் சகல  வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்

Read More »

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரின் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு படகுடன்  இராமேஸ்வரப்பகுதியை சேர்ந்த நான்கு இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்படவுள்ளனர்.

Read More »

பேரிணையம் மீது பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது – தலைவர் சி.முத்துகுமார்

வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி  ஒன்று 16.06.2017ந் திகதி; ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்றும் குறித்த செய்தி தொடர்பில் தங்கள் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாது வெளியிடப்பட்டுள்ளது எனவும் வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தின் தலைவர் சி முத்துமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் …

Read More »

புதிய அமைச்சர்களை தெரிவு செய்ய கால அவகாசம் எடுக்கவும்- .சிவாஜிலிங்கம்

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில்,

Read More »

மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்க கோரிக்கை!

கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Read More »

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு!

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது.

Read More »

மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும்

நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.

Read More »

திருகோணமலையில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிக்க அனுமதி

திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Read More »