போர்ச்சூழலில் உயிர்நீத்தவர்களுக்கு வெருகல் பிரதேச சபை வளாகத்தில் நினைவஞ்சலி

35 0

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச சபை வளாகத்தில்  புதன்கிழமை (26) நடைபெற்றது.

வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி, விளக்கேற்றி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.