முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.



