வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது.
இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

