Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் – குமார வெல்கம

சகல அதிகாரங்களையும் ஒரு இடத்தில் குவித்து  ஒரு நபரை பலப்படுத்துவதை விடுத்து ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நிறைவேற்று முறைமை குறித்தும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கருத்து முன்வைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.  இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  ஜனாதிபதி முறைமைக்கும் அந்த பதவிக்கும் நான் …

Read More »

தேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி – பசில்

மாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  சில மாகாண சபைகளுக்குகான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன.இன்னும் மூன்று மாகாண சபைகளுக்கான ஆயும்காலம் எதிர்வரும் மாதங்களில் நிறைவடையவுள்ளன. …

Read More »

போதைப்பொருள் தடுப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1984 என்ற குறித்த தொலைபேசி இலக்கம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

Read More »

வெலிகமையில் துப்பாக்கிச் சூடு

இன்று காலை 11.30 மணியளவில் வெலிகம பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்குள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்-பொலிஸ் தலைமையகம்

சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு, பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக பணப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளினூடாக, சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு, இந்தச் சன்மானம் வழங்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, T-56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்போரைக் கைது செய்யும் பொலிஸ் …

Read More »

சந்திரிகா பண்டாரநாயக்க தற்போது செல்லாக் காசு-சந்திரசேன

ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் தொடர்ந்தும் அரசாங்கத்தோடு இணைய மாட்டர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.  அநுராதபுரத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அமைச்சரவை தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இனி, அரசாங்கத்தோடு இணைய மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் அமைச்சுப் பதவியொன்று கிடைக்காமல், …

Read More »

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன்போது குறித்த வழக்கு …

Read More »

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெற வேண்டும்-ஜே.சி.அலவத்துவல

நாட்டில் இவ்வாண்டு தேர்தலொன்று விரைவில் நடைபெற வேண்டுமாயின் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருத்தல் வேண்டும். அதற்கு அடுத்து பாராளுமன்ற தேர்தல் அமையலாம். இந்த இரண்டு தேர்தல்களே தற்போதைய அரசியல் நிலையில் நாட்டுக்கு தேவையானவொன்று என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முதலில் மத்திய அரசாங்கத்தை ஸ்தீரப்படுத்திக்கொண்டு பின்னர் மாகாண சபை தேர்தலுக்கு செல்வதே உசித்தமானது என்றார்.  ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற …

Read More »

இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவர பிரதான நாடுகளுடன் பேச்சு- தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா  மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில்  பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை  முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் …

Read More »

இ.தொ.கா.வுடன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் இணைவு!

சப்பிரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னனியில் உப தலைவராக செயற்பட்ட ரூபன் பெருமாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்துக் கொண்டார். கொட்டகலையில் அமைந்துள்ள காங்கிரசின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒன்று கூடலுக்கு சென்ற ரூபன் பெருமாள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரசில் தமது இணைவை உறுதிப்படுத்தினர். ரூபன் பெருமாள் காங்கிரசிற்கு வருகை தந்ததை …

Read More »