வேலை நிறுத்தம் தொடர்கிறது

154 0

சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் நிறைவேற்றுச் சபை இன்று (03) கூடி அதன் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளது.

நேற்று பிற்பகல் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார செயலாளருடன் கலந்துரையாடியதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை பெற்றுக் கொடுக்காமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து 17 தொழிற்சங்கங்கள் நேற்று ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தமது தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.