Breaking News
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

முகாமைத்துவ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமது சம்பள உயர்வு உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சேவையின்  ஒருங்கிணைந்த தொழிற் சங்க ஒன்றியம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுத்தது. கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன் ஆரம்பித்த இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யட்டிநுவர வீதி மற்றும் தலதா வீதி ஆகியவற்றினூடாகச் சென்று கண்டி மணிக் கூண்டுக் கோபுரத்தை வந்தடைந்தது. கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன் ஆரம்பித்த இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யட்டிநுவர …

Read More »

ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்

வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது.  தலாவ – சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் சம்பவத்தில் மேற்படி ரயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளுக்கும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Read More »

விக்கி ஒரு கபட வேடதாரியா ?

வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக கூறி தமிழ் மக்களுடைய நிலங்களை சிங்கள மக்களுக்கு தாரைவாா்க்கும் சதி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசைப்படுகிறாா். அவருடைய ஆசை நிறைவேறினால் வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலேயே தமிழா்கள் 3ம் தர பிரஜைகளாக மாற்றப்படுவாா்கள்.  மேற்கண்டவாறு “அறம் செய்” அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் கூறியுள்ளாா். வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் …

Read More »

ஒற்றையாட்சி என்றால் ஆதரிக்கமாட்டேன் என்கிறார் சம்பந்தன்

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி வரைவில் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அதனை ஆதரிப்பார்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்குள்ளேயே அமையும் என்று பிரதமர் …

Read More »

விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி

விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்ட மூலம் மீதா விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  மேலும் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய …

Read More »

கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலி

அனுராதபுரம் – இளச்சிய, பேமடுவ பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.  நேற்று (21) பகல் 1.30 இற்கு ம் 2 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவத்தில் ஒன்றரை வயதான ஹங்சனி விக்ரமசிங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.  உயிரிழந்த குழந்தை விளையாடுவதற்காக கால்வாய் பகுதிக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  சம்பவத்தின் போது வீட்டில் தாய், தந்தை …

Read More »

மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி 21 நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் பெறப்பட்ட மின்சாரத்தில் சிக்குண்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்த சிறுவன் நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சுந்தரமூர்த்தி நிச்சயன்  என அடையாளம் கானப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி …

Read More »

எதிர்க் கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன- மஹிந்தானந்த

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆளும், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் செயற்படவேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்க்கட்சியினருக்கு எதிரான முறைப்பாடுகளை மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்க்கட்சியினருக்கு …

Read More »

தொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு – ஸ்ரீதரன்

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார்.   ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும்  அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More »

ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்-அஜித்

மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட மோசடிகாரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்.  ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் பி பேரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,  மத்திய வங்கி …

Read More »