30 நாட்களை எட்டிய மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் – சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடி தொடர்கிறது

188 0

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிவரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், நேற்றையதினம் (14.10.2023) மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்த சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு சென்றுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள் மது போதையில் தமது வாடிக்குள் உள்நுழைந்ததாகவும், தமது உடமைகளை களவாடியும் எரித்தும் சென்றதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்மை தாக்கும் விதத்தில் வந்த அந்த கும்பலிடம் இருந்து தாம் தப்பித்து சென்றதாகவும் அவ்வாறு தப்பி ஓடாமல் விட்டால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.