சந்தோஷ் நாராயணனின் யாழ் இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

228 0

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள் உட்பட 21 பணியாளர்களும், 47 நோயாளர்களுமாக 68பேர் கொல்லப்பட்ட தினத்தில் யாழில் தென்னிந்திய இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடாத்தும் ”யாழ் கானம்” இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தோஷ் நாராயணனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி தென்னிந்திய இசை அமைப்பாளர் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் இலவச இசை நிகழ்வு யாழ் முற்றவெளியில் இடம்பெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த இசை நிகழ்வு தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின்  கையொப்பத்தோடு  கோரிக்கை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.