தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு,தமிழ் பண்ணையாளர்களின் தொடர் போராட்டம் 29 நாளினை எட்டியுள்ளது.

308 0

சிங்களவர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு மலத்தமடு, பெரியமாதவனை கால்நடை பண்ணையாளர்கள் 29வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிங்களவர்கள் மேய்ச்சல் நிலத்தை அழித்து புதிய குடியிருப்புகளை தொடர்ந்தும் அமைத்து வருகின்றனர்.

தமிழ் பண்ணையாளர்களின்  தொடர்  போராட்டம் இடம்பெற்றுவரும் சம நேரத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்கள பௌத்த பிக்குகளின் ஆதரவோடு மேய்ச்சல் தரை நிலங்களை ஆக்கிரமித்து அந்த இடங்களில் குடியேற்றங்களை செய்து வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.