Breaking News
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

கூட்டமைப்பினர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டும் – சம்பிக்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாக மக்களின் கவலைகளை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார். கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி …

Read More »

இனங்களின் பிரச்சினைகளில் நேரடியாக தலையிட நாம் தயார்- மஹிந்த

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் என முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்புக் கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சி தலைமையலுவலகத்தில் அமரக்கிடைத்தமை மிக முக்கியமானதெனவும் அவர் கூறியுள்ளார். இதுகாலவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. கொழும்பு மாக்கஷ்பெர்ணான்டோ …

Read More »

ஈராக் போன்று இலங்கையும் மாறும்? உடன் நடவடிக்கை தேவை- தயாசிறி

இலங்கைக்குள் அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றை அமைக்க தேவையான உடன்படிக்கையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகிவருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இது தொடர்பில் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …

Read More »

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் ஜல்தர பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபர் தனது வீட்டில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற வர்த்தக நிலையங்களில் போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்வது சம்பந்தமாக நவகமுவ பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.  இதன்போது நடத்தப்பட்ட வீதிச் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரிடமிருந்து 08 …

Read More »

நுவரெலியா மாவட்டத்திலும் சோளத்தில் சேனா கம்பளி புளுக்கள்

நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோலத்தில் சேனா கம்பளி புளுக்கள் இருப்பதை ஹட்டன் ருவான்புற பகுதியில் இனங்கானபட்டுள்ளது.  இந்த சம்பவம் சனிக்கிழமை (19) பிரதேச மக்களால் இனங்கானபட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.  ஹட்டன் ருவன் புறபகுதியில் உள்ள மக்கள் தேயிலை, மரக்கரி போன்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த பகுயிதியில் சோளத்தின் விதையில் புளுக்களின் முட்டைகள் பிரதேசமக்களால் இனங்காணபட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளர்.  இதுபோன்ற புளுக்கள் பரவினால் தேயிலை மற்றும் …

Read More »

சந்திரிகாவை பதவியிலிருந்து நீக்க சுதந்திரக்கட்சி தீர்மானம் ?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சித்ததாகக் கூறப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

எவரிடமும் நாம் மண்டியிடவில்லை-சஜித்

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

புதையல்தோண்டிய ஐவர் கைது

புதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். சியாம்பலாண்டுவைப் பகுதியின் கல்லமுன என்ற இடத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவலொன்றினையடுத்து, சியாம்பலாண்டுவைப் பொலிசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து புதையல் தோண்டிய ஐவரையும் கைது செய்தனர்.  அத்துடன், அவ்விடத்திலிருந்த கார் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், சியாம்பலாண்டுவை மஜிஸ்திரேட் …

Read More »

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி செய்து நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காக கொண்டு போலியாக மின்னஞ்சல் பரிமாற்றம் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தினால் அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இந்த போலிய மின்னஞ்ஞல் சம்பந்தமாக அவதானமாக செயற்படுமாறு நாட்டின் நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் …

Read More »

ரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் – அர்ஜூன

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  எனினும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டது.  எனினும் எமது அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. இதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் …

Read More »