ஹெரோயினுடன் மூவர் கைது

301 0

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த வியாபாரிகள் உட்பட 3 பேரை நேற்று இரவு கைது செய்ததுடன் 54 கிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு நிந்தவூர் 4 ம் பிரிவு கடற்கரை வீதியில் குறித்த வீட்டை பொலிஸ் நிலைய பெருங் குற்றத்தடுப்பு பிரிவு பெறுப்பதிகாரி வை. விஜயராஜா தலைமையிலான பொலிசார் இராணுவத்தின் உதவியுடன் உதவியுடன் பொலிசார் சுற்றிவளைத்தனர் இதன் போது ஹெரோயினை விற்பதற்காக பொதி செய்து கொண்டிருந்த போது ஹரோயின் வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்ததுடன் 54 கிராம் ஹெரோயினை மீட்னர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 34, 34, 23, வயதுடையவர்கள் எனவும் இவர்களை 3 நாள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.