மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள்-சுகாஸ்

130 0

மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள் அவர்களின் உடமைகளையும் கால்நடைகளுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் தமிழ்த்தரப்புகளான பிள்ளையான், வியாழேந்திரன், கருணா, அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களா யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் சிங்கப்பூராக ஆக்கப்போகின்றார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் மயிலத்தமடுவில் வாடியிலிருந்த தமிழ் பண்ணையாளர்கள் உடைமைகள் எரிக்கப்பட்டு மாடுகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு சமூகமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.