நிலையவள்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016
  இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகஅமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.…
மேலும்

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. (காணொளி)

Posted by - December 24, 2016
கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வுகள், பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடத்தப்பட்டது. அனைத்து ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார சிறப்பு அதிதியாக…
மேலும்

பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம்

Posted by - December 24, 2016
அநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. உலக பாரம்பரிய இடமாக ஹொரிவில கிராமத்தை பெயரிடுவதற்கான சான்றுகள் அங்கு காணப்படுவதாக…
மேலும்

பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு(காணொளி)

Posted by - December 24, 2016
பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வழிகாட்டலின் கீழ் மண்முனை வடக்கு…
மேலும்

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - December 24, 2016
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பங்குத்தந்தை அ.ஜெ.அன்ரனி ஜெயரஞ்சன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை கடற்படையின் நிதி அனுசரணையுடன்…
மேலும்

களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10 அடி நீளமான சிலிண்டரை ஒத்ததான ஒரு இரும்பு பொருள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.…
மேலும்

வவுனியா சமளங்குளத்தில் மக்களுக்கு தென்னங்கன்று(காணொளி)

Posted by - December 24, 2016
வவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. வவுனியா நெடுங்கேணி தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் வடக்கு மாகாண தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய…
மேலும்

தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டம்

Posted by - December 24, 2016
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மகளிர் பிரிவின் ஊடாக 6 ஆவது கட்டத்தின்…
மேலும்

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம்- சான் விஜேலால் டி சில்வா

Posted by - December 24, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம்…
மேலும்

செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை

Posted by - December 24, 2016
கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை விதித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ்…
மேலும்