வவுனியா சமளங்குளத்தில் மக்களுக்கு தென்னங்கன்று(காணொளி)

384 0

vavu-thennaiவவுனியா சமளங்குளத்தில் 175 பேருக்கு தென்னங்கன்று வழங்கி வைக்கப்பட்டது.நெஸ்லே நிறுவனத்தின் அனுசரனையில் தென்னை அபிவிருத்தி சபையால் வவுனியா சமளங்ளத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

வவுனியா நெடுங்கேணி தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் வடக்கு மாகாண தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன்,

உதவி பிராந்திய முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது தென்னை பயிரிடும் முறை பற்றி செயன்முறை விளக்கம் அளிக்கப்பட்டதுடன்  175பயனாளிகளுக்கு  ஐந்து தென்னைங்கன்று வீதம் வழங்கியதோடு அதற்கான மானியமாக பசளைகளும்வழங்கி வைக்கப்பட்டது.