கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை விதித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் மாஅதிபர் தொலைபேசியூடாக உரையாற்றிய விடயங்களை தனியார் ஊடகங்கள் தேவையற்ற விதத்தில் பிரசாரம் செய்ததாக தெரிவித்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு தனியார் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

